ABOUT MUSLIM FESTIVALS
What ever i know about muslim festival i want to share with everyone so i created this blog and i posted information about muslim festival
Search This Blog
Thursday, October 28, 2010
லைலத்துல் கதர் நன்மைகள்
புனித ரமலான் மாதத்திலுள்ள ஒர் இரவுக்கு லைலத்துல் கதர் எனக் கூறப்படுகிறது.அது மிகுந்த பரக்கத்துகளும் நன்மைகளும் பொருதிய இரவாகும்.
அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்து
என அல்லாஹீதாஆலா தன் பரிசுத்த வேதத்தில் குறிப்பிட்டுள்ளான்.ஆயிரம் மாதங்கள் என்பது எண்பத்து முன்று(83)ஆண்டுகளும் நாண்கு(4) மாதங்களும் ஆகும்.
எந்த மனிதருக்கு இந்த இரவில் வணங்கும் பாக்கியம் கிடைத்து விடுகிறதோ அவர் மகழ்ச்சிகரமான பாக்கியம் பெற்ற வராவரர். இந்த ஒர் இரவை வணக்கத்தில்கழிக்கிறவர் எண்பத்து முன்று (83) ஆண்டுகளும் நான்கு (4) மாதங்களும் ஆகிய அதிகமான காலங்களை வணக்க வழிபாடுகளில் கழித்தவரைப் போன்றவராவார்.இங்கு, ''ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது'' எனக் கூறப்பட்டத்தில் எவ்வளவு காலம் அதிகம் என்பது விளக்கப் படவில்லை.
இது உண்மையிலேயே அல்லாஹூதஆலாவின் மாபெரிய பாக்கியமாகும். மதிப்பை உணர்ந்தவர்களுக்கு மகத்தானதோடு பாக்கியத்தை அவன் அருளியுள்ளான்.
அல்லாஹு தஆலா லைலத்துல் கதர் என்ற இந்த இரவை என் உம்மத்தினர் வழங்கியுள்ளான்.இது முந்திய உம்மத்தினர் எவருக்கும் கிடைக்கவில்லை.என ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அைஹைு வஸல்லம் அவர்கள் அருளியதாக அனஸ் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த பாக்கியம் நமக்கும் கிடைப்பதற்குறிய காரணம் பற்றப் பலவிதமான அறிவிப்புகள் உள்ளன.ஒர் அறிவிப்பில்,நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் முந்திய உம்மத்தினர்களுக்கு அதிகமான ஆயுட்காலம் கொடுக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.தங்கள் உம்மத்தினரின் வயதோ மிகக் குறைவாக இருந்தது. ஆகையால் இவர்கள் அவர்களுக்ககுச் சமமாக நற்செயல்கல் புரிவது சாத்தியமில்லாத ஒன்றாகக் கருதினார்கள். அதனால் அல்லாஹுதஆலாவின் பிரிய நபியவர்களுக்குக் கவலை ஏற்பட்டது. அதற்குப் பிரதியாகத்தான் அல்லாஹுதஆலா இந்த இரவை அருளினான் என்பதாகக் ௯றப்படுள்ளது.
பாக்கியமுள்ள ஒரு மனிதருக்கு (அவருடைய ஆயுளில்) பத்து லைலத்துல் கத்ரு இவர்கள் கழித்திருப் பாரானால்,அவர் (833) எண்ணூற்று முப்பத்து மூன்று ஆண்டுகள் நான்கு மாதகங்களை விட அதிகமான காலத்தை வணக்கங்களில் கழித்து விட்டவரைப் போன்றவராவார்.
மற்றோர் அறிவிப்பில் வருவதாவது: "பனீ இஸ்ராயீல்களில் ஓரு மனிதர் ஆயிரம் ஆண்டுகள் வரை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் என்னும் மார்க்கப் போரில் ஈட்பட்டிருந்தார்" என ரஸுலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் ஓரு தடவை ௯றினார்கள். அதனைக் கேட்ட ஸஹாபாக்ளுக்கு (அம்மாத்திரியான பாக்கியத்தைத் தாங்கள் பெற முடியவில்லையே என) அம்மனிதரின் மீது பொறாமை ஏற்பட்டது. அல்லாஹீ தஆலா அதற்குப் பகரமாக இந்த இரவை அருளினான்"
Tuesday, October 26, 2010
வெள்ளிக்கிழமை:-
வெள்ளிக்கிழமை தான் முஸ்லிம்களுக்கு புனிதநாளாக கருத்தப்படுகின்றனர்.இந்த நாள் தான் உருவானது என்றும்.இதே நாளில் தான் உலகம் அழிந்து விடும் என்று குர்ஆன் நூலில் ௯றப்பட்டுள்ளது.ஹாதிஸ் நுாலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேள்ளிக்கிழமையன்று தான் ஆதம் அலேஹி சலாம் அவர்கள் பிறந்த நாள்.
ஈது-ல்-அஸ்ஹா:-
ஹஸ்ரத் இப்ராஹிம் அலேஹி சலாம்,ஹஸ்ரத் இஸ்மாயில் அலேஹி சலாம்,இவர்கள் இரண்டு பேரின் ஞாபகத்தில் தான் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள்.
ஹஸ்ரத் இப்ராஹிம்க்கு நிண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்தார்கள். பல வருடங்களுக்கு பிரகு ஆண் குழந்தை பிறந்தது.அந்த ஆண் குழந்தையின் பெயர்தான் ஹஸ்ரத் இஸ்மாயில் அலேஹி சலாம்.ஒரு நாள் ஹஸ்ரத் இப்ராஹும் கனவில் கடவுள் தோன்றினார்.எனக்கு காணிக்கையாக உனது குழந்தையை பலி கொடுக்கவேண்டுமென்று கேட்டார். அதைகேட்டு இப்ராஹிம் தன்உடைய மகனிடம் ஆன்டவன் உடைய கோரிக்கையை அறிவித்தார்.இதை கேட்டு உடனடியாக ஹஸ்ரத் இஸ்மாயில் ஆண்டவன் உடைய கட்டளையை நிறை வேற்ற வேன்டும் என்று தன்னுடைய தந்தையை ௯றினார். மலை உச்சியை தந்தையும்,மகனும் அடைந்து பிறகு தன்உடைய வாளால் பலி செய்யும் நேரத்தில் ஆண்டவன் அவருடைய வாள் ஒரு பாறைமேல் விழுந்து அந்த இடத்தில் ஒரு ஆடு உடைய தலை வெட்டபடுகிறது.
அதனால் இந்த நாள் அல்லா அவர்கள் ஈது-ல்-அஸ்ஹா என்று பெயர் சூட்டி பண்டிகை நாளாக அறிவித்தார்.இந்த நாள் பணக்காரர் எல்லா முஸ்லிம்களும் ஆடு,மாடு,ஒட்டகம்,ஆண்டவன் பெயரில் குர்பானி செய்வார்கள்.
ஒரு ஆடு ஒரு ஆளுக்கு சமம். ஒரு மாடு 7 ஆடுக்கு சமம். அதனால் நாங்கள் 7 பெயர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி செய்வோம்.
ஒரு ஆடு ஒரு ஆள் குர்பானி செய்வார்.குர்பானி செய்யும் பொழுது அந்த மிருகத்தின் உடைய ரத்தம் பூமியில் விழும் முன் ஆண்டவன் எங்களுக்கு புண்ணியம் அளிக்கிறார்.
.
Saturday, October 23, 2010
மொஹரம்:-
இந்த மொஹரம் மாதத்தில் தான் முஸ்லிம்களுக்கு புத்தாண்டாக கொண்டாடபடுகிறது இந்த மாதத்தில் தான் ஹஸ்ரத் ஹசென்,ஹீசென்,இவர்கள் இருவரும் இஸ்லாமியர்களுக்காக பலி
கொடுத்தார்கள்
.
ரம்ஜான்:-
ரம்ஜான் மாதம் முஸ்லிம்களுக்கு ஒரு நல்ல மாதம்.ரம்ஜான் மாதத்தில் முதல் நோம்புலிருந்து இறுதி நோன்பு வரை வைத்தால் அல்ல தஆலா நம் பாவங்களை மன்னிப்பார்.ஒருவர் அம்மாதத்தில் பிறந்தால் அவர் பாவங்களை மன்னிக்கப்படும்.சைத்தான்களை அம்மாதத்தில் அடக்கி வைப்பார். நோன்பு மாத்தில் சொர்க்கத்தின் வாசற்படி திறந்திருக்கும்.ஒருவர் வெள்ளிக்கிழமை குர்ஆன்,தொழுகை மேற்கொண்டால் அவருக்கு ஆயிரம் வருட புண்ணியம் கிடைக்கும். ரம்ஜான் மாதம் முஸலிம்களுக்காகவே குர்ஆன் பிறப்பிக்கப்பட்கிறது. ரம்ஜான் மாதம் நோன்பு வைப்பதற்க்கு அல்ல நமக்கு சக்தி அளிக்கின்றார்.மறுநாள் பண்டிகையாக கோண்டாடப்படுகிறது.
ஷபே மேஹராஜ்:-
ஷபே மெஹராஜ் அந்த நாளில் நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸ்ல்லம்) அவர்கள் அல்லாவிடம் தொழுகை பற்றிய விவரத்தில் ஒரு நாளைக்கு 500 தடவை இருந்ததை விவாதம் செய்து ஒரு
நாளைக்கு 50 தடவை ஆகியது அவற்றை நபி (ஸல்லல்லாஹி அலைஹி வஸ்ல்லம்) அவர்கள் மீண்டும் அல்லாவில் வேண்டிக்கொண்டதாள் ஒரு நாளைக்கு 5 தடவையாக மாற்றப்பட்டத்.அன்று இரவு
தொழுகையும் குர்ஆன் ஒத வேண்டும் அது மட்டும்ல்லாமல் அல்லாவின் நினைவிலேயே இருக்க வேண்டும் அடுத்த நாள் நோன்பு இருக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)