புனித ரமலான் மாதத்திலுள்ள ஒர் இரவுக்கு லைலத்துல் கதர் எனக் கூறப்படுகிறது.அது மிகுந்த பரக்கத்துகளும் நன்மைகளும் பொருதிய இரவாகும்.
அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்து
என அல்லாஹீதாஆலா தன் பரிசுத்த வேதத்தில் குறிப்பிட்டுள்ளான்.ஆயிரம் மாதங்கள் என்பது எண்பத்து முன்று(83)ஆண்டுகளும் நாண்கு(4) மாதங்களும் ஆகும்.
எந்த மனிதருக்கு இந்த இரவில் வணங்கும் பாக்கியம் கிடைத்து விடுகிறதோ அவர் மகழ்ச்சிகரமான பாக்கியம் பெற்ற வராவரர். இந்த ஒர் இரவை வணக்கத்தில்கழிக்கிறவர் எண்பத்து முன்று (83) ஆண்டுகளும் நான்கு (4) மாதங்களும் ஆகிய அதிகமான காலங்களை வணக்க வழிபாடுகளில் கழித்தவரைப் போன்றவராவார்.இங்கு, ''ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது'' எனக் கூறப்பட்டத்தில் எவ்வளவு காலம் அதிகம் என்பது விளக்கப் படவில்லை.
இது உண்மையிலேயே அல்லாஹூதஆலாவின் மாபெரிய பாக்கியமாகும். மதிப்பை உணர்ந்தவர்களுக்கு மகத்தானதோடு பாக்கியத்தை அவன் அருளியுள்ளான்.
அல்லாஹு தஆலா லைலத்துல் கதர் என்ற இந்த இரவை என் உம்மத்தினர் வழங்கியுள்ளான்.இது முந்திய உம்மத்தினர் எவருக்கும் கிடைக்கவில்லை.என ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அைஹைு வஸல்லம் அவர்கள் அருளியதாக அனஸ் (ரலி) அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த பாக்கியம் நமக்கும் கிடைப்பதற்குறிய காரணம் பற்றப் பலவிதமான அறிவிப்புகள் உள்ளன.ஒர் அறிவிப்பில்,நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் முந்திய உம்மத்தினர்களுக்கு அதிகமான ஆயுட்காலம் கொடுக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள்.தங்கள் உம்மத்தினரின் வயதோ மிகக் குறைவாக இருந்தது. ஆகையால் இவர்கள் அவர்களுக்ககுச் சமமாக நற்செயல்கல் புரிவது சாத்தியமில்லாத ஒன்றாகக் கருதினார்கள். அதனால் அல்லாஹுதஆலாவின் பிரிய நபியவர்களுக்குக் கவலை ஏற்பட்டது. அதற்குப் பிரதியாகத்தான் அல்லாஹுதஆலா இந்த இரவை அருளினான் என்பதாகக் ௯றப்படுள்ளது.
பாக்கியமுள்ள ஒரு மனிதருக்கு (அவருடைய ஆயுளில்) பத்து லைலத்துல் கத்ரு இவர்கள் கழித்திருப் பாரானால்,அவர் (833) எண்ணூற்று முப்பத்து மூன்று ஆண்டுகள் நான்கு மாதகங்களை விட அதிகமான காலத்தை வணக்கங்களில் கழித்து விட்டவரைப் போன்றவராவார்.
மற்றோர் அறிவிப்பில் வருவதாவது: "பனீ இஸ்ராயீல்களில் ஓரு மனிதர் ஆயிரம் ஆண்டுகள் வரை அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் என்னும் மார்க்கப் போரில் ஈட்பட்டிருந்தார்" என ரஸுலுல் லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ல்லம் அவர்கள் ஓரு தடவை ௯றினார்கள். அதனைக் கேட்ட ஸஹாபாக்ளுக்கு (அம்மாத்திரியான பாக்கியத்தைத் தாங்கள் பெற முடியவில்லையே என) அம்மனிதரின் மீது பொறாமை ஏற்பட்டது. அல்லாஹீ தஆலா அதற்குப் பகரமாக இந்த இரவை அருளினான்"
No comments:
Post a Comment